BREAKING NEWS

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் முதல் குற்றவாளியான கோம்பையை சேர்ந்த விஜயபாபு உள்ளிட்ட தலைமறைவான 7 குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் ரேஞ்சர் நாகராஜ், வனவர் அன்பரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காட்டுமாடு வேட்டை செய்யப்பட்டு தோட்டபகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மருத்துவர் மதியழகன் என்பவர் தோட்டத்தின் அருகில் காட்டுமாடு வேட்டையில் ஈடுபட்ட குரங்கணி பகுதியை சேர்ந்த சன்னாசி அவரது மகன் அறிவழகன் உள்ளிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்து வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில்,

சம்பவத்தில் 9 நபர்கள் ஈடுபட்டதாக தெரியவந்ததை அடுத்து, 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் முதல் குற்றவாளியான கோம்பையை சேர்ந்த விஜயபாபு (கள்ளர்முரசு மாத இதழ் செய்தியாளர்) உள்ளிட்ட தலைமறைவான 7 குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS