போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் போடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு g. நாகராஜ், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு செல்லப்பாண்டி, மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. சிவ பாலகுரு, மண்டல செயலாளர் திரு. அழகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட பொருளாளர் ஐயப்பன் அவர்கள் ஏற்பாட்டின் பேரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் தேனி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த துணை செயலாளர்கள் பிரபு மற்றும் மனோஜ், தொழிலாளர் நல அமைப்பாளர் அருண் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள், நற்பணி இயக்க நண்பர்கள், பொதுமக்கள் முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
