BREAKING NEWS

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.

 

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

 

மேலும் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.உடன் தமிழ் மாநில காங்கிரஸ் தேனி வடக்கு மாவட்ட தலைவர் K.S.M.R.மகேந்திரன்.

 

அதிமுக போடி நகர செயலாளர் V.R.பழனிராஜ், மேற்கு நகர செயலாளர் ஜெயராம் பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

 தனது சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்தார் கட்சி நிர்வாகி உடன் ஆலோசனை செய்து பின் பொது மக்களையும் சந்தித்தார் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள் அவரது சட்டமன்ற அலுவலக அவரது அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

 

இதில் அரசு சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் வருகை தந்து தனது சட்டமன்ற தொகுதியில் செயல்பாடுகளை பற்றி கேட்டறிந்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )