போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி செய்தியாளர் மு.பிரதீப்.
தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரியும் கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரி கோசம் இட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதர் பேரூராட்சி அருகே அரசு பொறியல் கல்லூரி இயங்கி வருகிறது நேற்று இரவு கல்லூரியை முடித்து விடுதிக்கு சென்ற மாணவர்களை குடிபோதையில் இருந்த மர்ம நபர்கள் மாணவர்களை தாக்கி அதில் ஒரு மாணவனை அடித்து முள் புதரில் வீசி சென்று விட்டதாகவும்,
தற்போது அந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அரசு பொறியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும் தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கூடிய தெருவிளக்கு அமைத்து தரக் கூறியும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த காவல்துறையினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தாக்கிய மர்ம நபர்களை கைது செய்வதாகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கும் தங்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாகவும்,
கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மாணவர்களே பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.