போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழகம் முழுவதும் கஞ்சா,அபின்,குட்கா போன்ற போதைப்பொருட்களை தடை செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மாநில நிர்வாகி பாலா என்கிற பாலயோகி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும் ந்ன்றும் குட்கா, அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை இளைஞர்கள் அதிக அளவு பயன்படுத்துவதாகவும், அதனால் சமூக விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு அவர்களின் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வதாகவும்,
அதிக அளவில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் இதனால் சமூகத்தில் இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவருவதாகவும் கூறிகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர், ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போதைப்பொருட்களை தடை செய்யக்கோரி கண்டன கோஷஙகளை எழுப்பினர்.