போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு பாஜக நிர்வாகி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் :
எந்த தேர்தல் வந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலைமையின் கீழ் கூட்டணி அமையும் திமுக இல்ல அதிமுக கூட்டணி தான் தலைமையில் தான் கூட்டணி அமைந்த இப்படி தான் தமிழகத்தில் இரண்டு அணிகளும் தேர்தலை சந்தித்து வருகிறது 2016ல் அதிமுக முன்னாள் முதல் ஜெயலலிதா இருக்கும் போது தனியாக நின்று வெற்றி பெற்றது இதை உருவாக்கியவர் முன்னாள் ஜெயலலிதா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி நாட்டின் நலன் கருதி நாட்டிற்கு நல்ல பிரதமர் வேண்டும் என்று நினைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் சந்தித்தோம்.,
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை
வந்த பிறகு பாஜகவுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி தன்னந்தனியாக நின்று போட்டியிட்டு போட்டியிட்ட விளைவை அவர்கள் பார்த்தார்கள் ஒரு சில இடங்களில் சொற்ப இடங்களில் வெற்றி பெற முடிந்தது அவர்களின் நிலை அறிந்த பிறகு தான் மீண்டும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தார்கள் அதன் வழி தான் கூட்டணி தொடர்ந்தது அது ஈரோடு இடைத்தேர்தலில் கூட தன்னந்தனியாக நின்று அதிக வாக்குகளை பெற்றோம்.
ஈரோடு இடைத்தேர்தல் முன்பு வரை மூன்று அணி என பேச்சு அடிபட்டு இருந்தது இடைத் தேர்தலுக்குப் பின்பு ஒரே அணி அதுவும் எடப்பாடி பழனிச்சாமி கீழ் தான் அதிமுக இயங்குகிறது.
கட்சி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என உறுதிப்பட்டது அடிப்படையில் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை வழங்கி இருக்கிறது ஒரு இழந்த சின்னத்தை மூன்றாவது முறை பெற்ற ஒரே கட்சி அதிமுக தான்.
ஈரோடு இடைதேர்தல் என்பது ஆக்சன் தேர்தல் அல்ல ஒரு ஏலம் அது பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.
காலம் காலமாக ஒருவர் கட்சியிலிருந்து மாற்றுக் கட்சிக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இது அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை புரியவில்லை என புதிராக இருக்கிறது எந்த நிர்வாகி இருந்தாலும் ஒரு கட்சியில் கருத்து வேறுபாட முரண்பாடா இருந்தால் வெளியேறுவார்கள் வெளியே மாற்று கட்சி செல்வார்கள் அது அவரின் தனிப்பட்ட விருப்பம் இதே போல தான் அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் நைனார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் இருக்கிறார் இதை நாங்க பெரிதாக எடுக்கவில்லை அது அவரின் தனிப்பட்ட கருத்து.
முதலில் பாஜகவின் ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் அதிமுகவில் இனைந்த போது வாழ்த்துக்கள் சொன்னார் அது பண்பட்ட அரசியல் ஆனால் தற்போது
அதற்கு அப்புறம் அவர் பேச்சு எல்லாம் படபடப்பு பயத்தின் உச்சியில் இருக்கிறார் அவர் பேச்சில் இந்த படபடப்பும் பயமும் எதுக்கு என்று தெரியவில்லை.
ஐடி விங்கில் இருக்கிறதுனால என்ன ரகசியத்தை வெளியிடுவாரோ என்று பயத்தில் பதட்டமும் பயமும் ஏன் அண்ணாமலை இருக்கு என்று தெரியவில்லை.
அதிமுக எதிர்வினை ஆக்தி பழக்கம் இல்லை நல்வினை ஆக்கி தான் பழக்கம் எதிர்வினை ஆற்றினால் எதிர்வினை
தான் வரும்.
அண்ணாமலை எதிர்வினை ஆற்ற வேண்டிய இடம் திமுக கமிஷன் கரப்ஷன் இதையெல்லாம் அவர் இதெல்லாம் சுட்டிக்காட்டி மத்திய அரசு மூலமா நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அண்ணாமலை வாய் சொல்லின் வீரனடி என்று போல் பத்திரிக்கையின் வாயிலாக வெறும் கண்டனங்கள் தெரிவித்து இருக்கிறாரே தவிர வேற என்ன செய்திருக்கிறார் அண்ணாமலை.
இப்போது கூட முதல்வர் ஸ்டாலின் அவரது பிறந்த நாளில் விழாவில் யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் கூறி கூட்டணி அமைப்பிற்கான பேசி வருகிறார் இதையெல்லாம் பேசுவதற்கு திராணி இல்லாத துப்பில்லாத அண்ணாமலை அதிமுகவை பார்த்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
திருவண்ணாமலை ஒரு லட்சம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவே அசைத்துப் பார்க்க முடியாது.
அடிப்படை அரசியலில் கூட தெரியாதவர் அண்ணாமலை இவர் கட்சியிலிருந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும்
கட்சியிலிருந்து போகிறவர்களை போகட்டும் என சொல்லும் தலைவர் ஒரே தலைவர் அண்ணாமலை தான் இதை தேசிய தலைவர் நட்டாவும் அமித்ஷாவும் மோடியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் இனி அண்ணாமலைக்கு ஆபத்து என்று நினைக்கிறேன்.
தேசிய கட்சியின் முடிவுப் பொறுத்த அளவுக்கு டெல்லியில் தான் முடிவு எடுக்க வேண்டும் தலைமை அங்கு தான் உள்ளது.
பாஜக தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது அங்க எந்த மாநிலத்திலும் பாஜக முடிவெடுக்க முடியாது கூட்டணி எந்த முடிவு எடுத்த எடுக்க வேண்டியது இருந்தாலும் அண்ணாமலை முடிவெடுக்க வேண்டியது கிடையாது இன்று அண்ணாமலைக்கு பதில் நாளைக்கு உண்ணாமலை வரலாம் நாளைக்கே கூட தலைவர மாத்தலாம் அண்ணாமலை நிரந்தரமல்ல பாராளுமன்ற தேர்தல் என்பது தேசிய கட்சிக்கு முக்கியமான தேர்தல் எங்களுக்கு மாநில தேர்தல் தான் முக்கியம் அதேபோல் அவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல்தான் முக்கியம் கூட்டணியை முடிவு தேசிய தலைவர் நட்டா மோடி, அமித்ஷா,
தான் முடிவு செய்ய முடியுமே தவிர அண்ணாமலை முடிவு செய்ய முடியாது சும்மா வாதத்துக்கு சொல்லலாம் எதார்த்தத்தை கூட தெரியாதவர் தான் அண்ணாமலை தலைவரே குரல் உருவாக வேண்டும் வடிவேல் படம் போல் நானும் ரவுடிதான் ரவுடிதான் என என்பது போல் நானும் தலைவர் தான் எனக் கூறி வருகிறார் அண்ணாமலை தேமுதிக தேய்பிறை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், வர்த்தக மாவட்ட அணி செயலாளர் ராமர்,
வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், எட்டயாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், இளைஞர் அணி இணைச் செயலாளர் கருப்பசாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கோபி, கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, முருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.