மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ரவிச்சந்திரன் இத்திட்டத்தின்
மகளிர்க்காண சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ,மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் ஆகியவற்றை பளனாளிகளுக்கு வழங்கினார்கள்.
இந்த திட்டத்தில் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சேர்ந்து பயனடையலாம் எனவும் கூறினார். புதுச்சாவடி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் இத்திட்டத்தில் பயனடைந்த மகளிர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் அஞ்சல் நிலைய ஊழியர்கள் மகளிர், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக அஞ்சலக உதவியாளர் விஜயா வரவேற்றார். அஞ்சலக உதவியாளர்
கிருஷ்ணபிரியா நன்றி கூறினார்.
CATEGORIES அரியலூர்