மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டின் நினைவை போற்றும் வகையில் பாரதியின் நினைவு நாளை மகாகவி நாள் என கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தை தொடர்ந்து,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் பாரதியாரின் மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
CATEGORIES தூத்துக்குடி
