மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனியில் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தேனி மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் துவங்கிய இந்த அணிவகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷஜீவனா, காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்
மற்றும் தேனி மாவட்ட ஆயுதப்படை போலீசாரும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பழனிசெட்டிபட்டியில் துவங்கிய அணிவகுப்பு பேரணி, கம்பம் சாலை, தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை மும்முனை சந்திப்பு வழியாக மதுரை சாலையில் உள்ள பங்களாமேட்டில் நிறைவடைந்தது.
முன்னதாக பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், நூறு சதவீத வாக்குப்பதிவு நடந்திடும் வகையில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆட்சியர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார்.