மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை வங்கி கொள்ளை சம்பவம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன்,நகர மன்ற உறுப்பினர்கள்,கவியரன், வள்ளியம்மாள் மாரியப்பன்,
செண்பக மூர்த்தி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,மாவட்ட வழக்கறிஞர் மாவட்ட அணி செயலாளர் சிவபெருமான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் முன்னாள் ராணுவ வீரர் சுப்புராஜ்,ராமமூர்த்தி, பழனி குமார், பழனி முருகன், கோபி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் :
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம் இதனை ஒட்டி பாரதப் பிரதமர் இந்திய குடிமகன் ஒவ்வொருவர் வீட்டிலும் தேசிய கொடியேற்றி சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் எடுத்திருந்துள்ளார். பிஜேபியுடன் டிடிவி தினகரன் இணைந்தால் அவர்களது தலைமையை அதிமுக ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்விக்கு யார் யார் கூட வேண்டுமென்றாலும் இணைந்தாலும் அதிமுக தனித்துவம் இழக்காது அதிமுக ஆலமரம் போன்றது. எங்களுக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது அதில் நாங்கள் பயணம் செய்வோம். கூட்டணி குறித்து பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ தற்போது வாய்ப்பே இல்லை.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று கிராம சபை கூட்டத்தை நடத்தினர் ஆனால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறாமல் இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு அவமதிப்பு. அதிமுகவில் முறையாக தேர்தல் நடத்தி கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
ஓபிஎஸ் நியமிக்கும் நிர்வாகிகள் குறித்த கேட்ட கேள்விக்கு அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் இதுதான் ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் நிலைமை, அதிமுக லேபிலை பயன்படுத்தினால் ஓபிஎஸ் இருக்கு ஏமாற்றமே மிஞ்சும், பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாக இருந்து விடுதலைக்காக பல்வேறு தலைவர்கள் தங்களது இன்னுயிர்கள் நீர்த்ததன் காரணமாகவே நாம் சுதந்திரம் பெற்றுள்ளோம் அச்சுதந்தரத்தை அந்த சுதந்திரத்தை அரசு கொண்டாவேண்டும் அதை தான் பாரதபிரதமர் செய்துள்ளார்.
தற்போதைய காவல்துறையினர் செயல்பாடுகளை கண்டு மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இந்த அரசுக்கு முழுமையான பொறுத்துள்ளது அதை எதிர்க்கட்சி என்ற முறையில் சுட்டிக்காட்டுவோம்
திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பல்வேறு பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சென்று எடுத்துக் கூறியது ஆனால் தற்போது திமுக ஆளும் கட்சியாக உள்ளது தற்போதைய ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை மக்களிடம் ஏன் அதிமுக கொண்டு செல்லவில்லை என்ற கேள்விக்கு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சட்டசபையில் மக்களின் குரலாக பேசி வருகிறார். அது மட்டுமல்லாமல் விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு என்ற பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளோம் எனவே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் என்று மக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.