BREAKING NEWS

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:
சின்னசேலம் வட்டம் தகரை கிராமத்தில் வருவாய் மற்றும் வேளாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் “மக்கள் தொடர்பு திட்ட முகாம்” நடைபெற்றது.

விழாவின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா வரவேற்புரையை தொடந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட சமூக நலத்துறை, துணை ஆட்சியர் வேளாண்மை திட்ட இயக்குனர் கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன்,

கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் மீனா அருள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மற்றும் அனைத்து துறை சார்ந்த தலைமை அதிகாரிகள் மற்றும் சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், ( கி. ஊ),துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் விழாவில் கால்நடைத்துறை,வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை,சுகாதாரத் துறை, என துறை ரீதியாக குடில் அமைத்து பொது மக்களுக்கு துறை ரீதியான விளக்கங்களையும் மாதிரி படங்களையும் வைத்து நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்திருந்தனர்.

மேலும் விழா சிறப்பாக நடைபெற சின்ன சேலம் ஒன்றிய குழு துணை தலைவர் வி.வி.அன்பு மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன்,ஒன்றிய கவுன்சிலர் திவ்யபாரதி கோம்பையன்,தகரை ஊராட்சி மன்ற தலைவர் நீலாவதி முருகேசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் 296 பயனாளிகளுக்கு 61 லட்சத்து 76 ஆயிரத்து 1 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாக மனுக்களை அளித்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS