மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,
விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் உழவர் சந்தை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதனையொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென திருவள்ளூர் பிரதான சாலையில் அமர்ந்துமறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையொட்டி மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறையினர் திருவள்ளூர் தேரடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த மறியல் போரட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.