மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு – உரிய இழப்பீடு வழங்க கோரி காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி கோவில்பட்டி கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாக்களில் நடப்பு பருவத்தில் பருவ மழை பொய்த்து போனதன் காரணமாகவும்,
மக்காச்சோளம் பயிர்களை படைப்பு தாக்குதல், நிலத்தில் ஈரம் இல்லாமல் உளுந்து, பாசி பயிர்கள் மஞ்சள் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பயிர்கள் காய்ந்து விட்டதால் மகசூல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அரசு ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி கையில் காய்ந்த பயிர்களை கொண்டு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன் தலைமையில்…
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்னர் கோட்டாட்சியரிடம் காய்ந்த பயிர்களை காட்டி உரிய இழப்பீடு வழங்க கோரியும் மனு அளித்து முறையிட்டனர்.