BREAKING NEWS

மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.

மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றி பாறையில் அமைந்துள்ளது மங்கள தேவி கண்ணகி கோயில்.

தமிழகத்தின் காப்பிய நூலான சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க இக்கோயில் சேரன் செங்குட்டுவனால் இமயமலையில் இருந்து கல்லை எடுத்து வந்து கங்கையில் நீராட்டி கோவலனும் கண்ணகியும் புஷ்ப வாகனத்தில் விண்ணுக்கு சென்ற இடமாக கருதப்படும் விண்ணேற்றி பாறையின் உச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகிக்கு கோவில் கட்டப்பட்டது.

 

தற்பொழுது இந்த கோயில் கும்பாபிஷேகம் செய்யப் படாமலும் சிதிலமடைந்து காணப் படுவதாலும் இந்த கோவிலை புணரமைத்து கட்டுவதற்கு தமிழக கேரளா எல்லையில் இருமாநிலத்திற்கும் உரிமை போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மங்கள தேவி அமைந்திருப்பது தமிழக எல்லைப் பகுதியில். 

 

எனவே இன்று கண்ணகி கோயிலை மீட்பதற்கு கூடலூரில் நடைபெற்ற அனைத்து இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து மங்களதேவி கண்ணகி கோட்ட உரிமை மீட்பு இயக்கம் என்று துவக்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து வரும் சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவை ஆறு நாள் விழாவாக கொண்டாட வேண்டும் எனவும், தமிழக பகுதியில் பளியன் குடியிலிருந்து தமிழக வனப் பகுதி வழியாக கண்ணகி கோட்டத்திற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சாலை அமைத்து தர வேண்டும் எனவும்,

 

இந்த திருவிழாவினை தனிநபர் மற்றும் அறக்கட்டளைகள் நடத்த அனுமதிக்க கூடாது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே இந்த ஆண்டு கண்ணகி கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் எனவும் ,கண்ணகி சிலை சிதிலமடைந்து உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் கண்ணகிக்கு புதிதாக சிலை அமைக்க வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

CATEGORIES
TAGS