மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் செந்தில் ஆண்டவர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பங்குனி உத்திர பெரு விழா சிறப்பாக நடைபெற்றது அதிகாலை முதலே கணபதி ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குவிந்த பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடியும் காவடியை தோலில் சுமந்தபடியும் ஊரின் முக்கிய வீதிகளில் வளம் வந்து செந்தில் ஆண்டவருக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் முன்னதாக மூலவருக்கு 11 வகையான திவ்ய திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று கூட்டு பிரார்த்தனை வழிபாடுகளும் நடைபெற்றது இதில் திரளான சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்று விண்ணதிற அரோகரா முழக்கமிட்டு முருகப்பெருமானை சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் குடிமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்