BREAKING NEWS

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. அடுத்த மடத்துக்குளம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்து பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி செஞ்சேரி மலையில் நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

 

மேலும் உடுமலைப்பேட்டை. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், மானிய கையூட்டு அதிகாரிகள் கேட்பதாகவும் விவசாயிகள் தரப்பில் பகிரங்கமாக புகார் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் போலி விதைகளால் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் உரக் கம்பெனிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் இதனால் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள செய்த விவசாயிகளுக்கு சாகுபடி குறைந்து பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளதால் போலி விதைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் விவசாயிகளிடம் நெல் குறைந்த விலைக்கு வாங்கி விட்டு கொள்முதல் மையத்தில் வியாபாரிகளுக்கு கூடுதலான விலைக்கு அதிகாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

 

இது மிகவும் கண்டனத்திற்குரியதுமற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து உள்ளனர். ஆகையால் தென்னை நார் தொழிற்சாலையை மேம்படுத்த வேண்டும் மற்றும் மத்திய மாநில அரசுகள் கொப்பரைக்கு 150 விலை நிர்ணயிக்க வேண்டும்.,

 

கேரளாவை போல உரித்த காய்கள் ஏக்கருக்கு 40 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டும் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும், பனை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மடத்துக்குளம் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் உட்பட உடுமலைப்பேட்டை. மடத்துக்குளம் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )