மட்டப்பாறை அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச முதியவர் உயிருடன் மீட்பு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செல்லும் பெரியார் பிரதான கால்வாய் தற்போது எங்கு பார்த்தாலும் மழை பெய்வதால் அளவுக்கு அதிகமான தண்ணீர் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது.
இந்தத் தண்ணீரில் தப்பித்தவறி யார் விழுந்தாலும் இழுத்துச் செல்வது உறுதி. அப்படிப்பட்ட நீரில் நேற்று முன்தினம் இரவு 12.11.2022 சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் முல்லைப் பெரியார் கால்வாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
விழுந்த அந்த முதியவர் மட்டப்பாறை அருகே செல்லும் 11 வது கண் உள்ள கால்வாயின் ஓரப்பகுதியில் தேங்கும் குப்பையில் நேற்று இரவு முழுவதும் ஏறி நின்று கொண்டார். இதனால் அவரை தண்ணீர் இழுத்துச் செல்லவில்லை.
இதைப் பார்த்த பொதுமக்கள் முதியவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் முதியவர் கொடுப்பதால் விளாம்பட்டி போலீசருக்கும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தனுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அந்தத் தகவலின் பெயரில் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியோரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கை முதியோரை கயிறை கட்டி மேலே கொண்டு வந்தனர் பின்னர் விசாரித்த போது ஹிந்தியில் பேசினார். இதனால் ஹிந்தி தெரிந்த ஒருவரை வைத்து முத்திரை போலீசார் முயன்ற போது உத்தரப்பிரதேச பகுதியைச் சேர்ந்தவர் என்றும்,
பெயர் பீர்பால் கார் போக்கர் வயது 60 என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து விசாரிபட்ட போது அவரைப் பற்றி எந்த விதமான விபரமும் தெரியவில்லை முன்னுக்குப் பின் முரணாக பைத்தியம் பிடித்தது போல் பேசினார்.
பின்னர் அவரை பெயரைப்புத் துறையினர் எப்பகுதியில் வேலை செய்தார்கள் என்று கேட்டு பீர்பால் கார் போக்கரை வேலை செய்யும் பகுதிகளான ராமராஜபுரம் ஒட்டியுள்ள மில் பகுதியில் இறக்கி விட்டு சென்றனர். இந்தச் சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பட விளக்கம் கால்வாயில் 11 ஆவது கண் கால்வாயில் உள்ள குப்பையில் அமர்ந்திருந்தவரை நிலக்கோட்டை தீயணைப்பு துறை மீட்டபோது எடுத்த படம்.