BREAKING NEWS

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.

தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற்றது பழனிசெட்டிபட்டி ஐ.ஓ.பி. வங்கி அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் அப்பகுதி பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரத்தை கட்டுப்படுத்தி, அங்கு அமைதியை நிலைநாட்டிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS