BREAKING NEWS

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை அணிவித்து பாராட்டி பேசினார்.அப்போது பேசிய நடிகை ரோகினி.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நாடு வெட்கப்பட சம்பவமாக உள்ளது
பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கின்ற சம்பவம் எல்லாருக்கும் வெட்கக்கேடாக இருக்கின்றது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட வெட்ககேடானது. நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது குடும்ப கவரவும், மரியாதையும் சுமத்தி வைத்திருப்பதால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேற்று வருகிறது.


பெண்களை நிர்வாணம் படுத்தி விட்டால் உங்களை அவமானம் படுத்தி விட்டதாக கருதுகின்றனர்.
அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கி இருக்கின்றது நம்முடைய சமூகம் தான்.
பெண்களின் மீது இது போன்ற பார்வை எப்போது கலைகின்றதோ, அப்போதுதான் பெண்களுக்கு விடுதலை கிடைக்கும்.


குற்றங்கள் நடக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறி உள்ளாக தெரிவித்தார்.

CATEGORIES
TAGS