மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.
காட்பாடி அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனை.
வேலூர் மாவட்டம்; காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து விஜயவாடா வரை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த சாலை அமைக்கும் பணிக்காக மகி மண்டலம் ஏரியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து சாலை அமைக்கும் பணிக்காக கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு மண் ஏற்றி வந்த லாரி மண் கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே லாரி ஓட்டுநர் லாரியை இயக்கி வந்ததால் சாலையில் இருந்த மின் கம்பிகள் அந்த லாரியின் தொட்டியில் சிக்கி இழுத்துவரப்பட்டது இதனால் சுமார் 22 மின்சார கம்பங்கள் உடைந்து கீழே சாய்ந்தன.
மின்கம்பங்கள் கீழே சாய்ந்ததால் மகிமண்டபம், பெரிய போடி நத்தம், புதூர் கிராமம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றன இதனால் அந்த கிராமங்கள் இரவில் மூழ்கியுள்ளது. மண் ஏற்றி வந்த நான்கு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து மின்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளித்தும் தற்போது வரை இந்த பகுதிக்கு வரவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் தற்போது வரை உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் உடனே அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.