மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்.


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இது சந்த் தெற்கு வீதியும் – பழைய பேருந்து இணைக்கும் முக்கிய வழியாகம். இந்த வழியாக கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் மது குடிப்பவர்கள், மது குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்களிடம் தகராறில் ஈடுபடுவதால், இந்த கடையை அகற்றுமாறு அப்பகுதி வணிகர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை கடையை அகற்றவில்லை. இதனால் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகள் அடைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கடையை அகற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
