BREAKING NEWS

மதுரையில் விழா: ரசிகர்கள் முன்னிலையில் `விருமன்’ பாடல்கள் வெளியீடு.

மதுரையில் விழா: ரசிகர்கள் முன்னிலையில் `விருமன்’ பாடல்கள் வெளியீடு.

கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகின்றன.

 

முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி, இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

 

வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3-ம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

 

 

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு சாண்டி மாஸ்டரின் குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் பவானியும் நடனமாடுகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )