BREAKING NEWS

மதுரை மாவட்டம். காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம். காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் வருகின்ற 21.08.2025ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலையம், மதுரை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி கிராமத்தில் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரசிகர்கள் என அதிமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம்!

Parking -Iயை வந்தடைய வேண்டிய மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்.

1. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநட்டிற்கு வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

2. தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

3. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

4. தஞ்சாவூர் சரகம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், A.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

Parking -I(A)யை வந்தடைய வேண்டிய மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்.

1. தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் திண்டுக்கல், பாண்டியராஜபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

2. தேனி மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்காணூரணி, நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

Parking -II மற்றும் Parking -III வந்தடைய வேண்டிய மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்.

1. சென்னை மாநகரம் மற்றும் வட மாவட்டங்களான விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை இருந்து திருச்சி மார்க்கமாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் விராலிமலை, மேலூர், விரகனூர் ரவுண்டானா, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரைபத்தி வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும். கனரக வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம் :

1. சென்னை மாநகரம் மற்றும் தமிழ்நாடு வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக செல்ல வேண்டும்.

வட 2. தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இருந்து மதுரை மார்க்கமாக மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.

3. சென்னை மாநகரம் மற்றும் தமிழ்நாடு வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்ல வேண்டும்.

4. சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் காரைக்குடி கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.

5. விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், வழியாக செல்ல வேண்டும்.

6. தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

7. தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் மதுரை மார்க்கமாக இராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புனரி வழியாக செல்ல வேண்டும்.

8. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், வழியாக செல்ல வேண்டும்.

9. தேனி மாவட்டத்தில் இருந்து விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி, பேரையூர் வழியாக செல்ல வேண்டும்.

10. விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் பேரையூர், உசிலம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

11. தேனி மாவட்டத்தில் இருந்து இராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, வழியாக செல்ல வேண்டும்.

12. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தேனி செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், பெரியகுளம், வழியாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS