BREAKING NEWS

மத்திய அரசு நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு பணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக காவிரி சங்க விவசாயிகள் எதிர்ப்பு.

மத்திய அரசு நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு பணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக காவிரி சங்க விவசாயிகள் எதிர்ப்பு.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், தண்ணீரை தனியாருக்கு, விற்பனை செய்வதற்காக மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற அரசாணை பிறப்பித்தது.

இதற்கு எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நிலையில், வீட்டுக்கு பயன்படுத்தும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு 3 மாதத்திற்குள்ளாக தலா பத்தாயிரம் செலுத்த வேண்டும்.

பணத்தை செலுத்தி தான் நிலத்தடி நீரைக் குடிநீருக்காக பயன்படுத்துகிறேன் என்பதை பதிவு செய்ய வேண்டும் என விளம்பரப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்க கூடியது. இந்த நடவடிக்கை என்பது குடியரசுக்கு எதிரானது. இது தனிமனித உரிமையை பறிக்கும் செயலாகும்.

இது குறித்து தமிழக அரசு வாய்மூடி மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கான போராட்டத்தை தீவிர படுத்துவோம் தமிழக அரசு இதை மூடி மறைக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )