சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி தஞ்சையில் விவசாய தொழிலாளர் சங்கம் பேரணியாக சென்று மனு கொடுத்து போராட்டம்.

தஞ்சை அருகே உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தஞ்சை ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாஸ்திர பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அரசிடம் ஒப்படைக்க கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு குடிமண இல்லாத கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்க கோரி தஞ்சை வட்டாட்சியரிடம் மனு கொடுக்க தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
