மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேலூரில் பேட்டி.
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு அமைதியை விரும்புகிறது அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருவதாக மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேலூரில் பேட்டி..
வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் தனியார் ஹோட்டலில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ் நாடு மாபெரும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமுக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டு சமூக ஆர்வலர்கள். திரைப்பட செலிப்ரட்டிகள். மருத்துவர்கள். வழக்கறிஞர்கள். சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 69 நபர்களுக்கு விருது விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
தமிழ்நாட்டில் நிலம் இல்லாத தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக உழைத்து வருகிறார்.
கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை அறிவித்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதை எதிர்க்கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் இரு நாடுகளும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளன .
இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்.
உலக அமைதிக்காக இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளது. எந்த ஒரு சமூகத்தினருக்கும் மத்திய அரசு எதிரானது அல்ல.
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு அமைதியை விரும்புகிறது.
அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
கலப்புத் திருமணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தமிழகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது .
இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,
மத்திய அரசு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அனைவருக்கும் வங்கி கணக்கு,முத்ரா வங்கி கடன் இலவச எரிவாயு இணைப்பு,அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி உள்ளது என கூறினார்.