மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் நல அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட வழங்குவது பெண்களுக்கு சுய தொழில் கற்றுத் தருவது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை பெண்களின் முன்னேற்றத்திற்காக வழங்கி வருவது வழக்கம் இந்த நிலையில் பரமக்குடியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் ரூப் சந்தர் வழிகாட்டுதலின்படி பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் மற்றும் கைவினை பொருட்களை ராமநாதபுரம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், பெண்கள் நல அறக்கட்டளை நிறுவனர் கல்யாணி கார்த்திகேயன், அரசு தொழில் கல்லூரி முதல்வர் வாலை ஆனந்தம், அரசு கலை கல்லூரி முதல்வர் மேகலா, நாகர்கோவில் ஜவுளித்துறை அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் வழங்கினர் இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு இலவச தையல் இயந்திரங்களை வாங்கி பயன் பெற்றனர்.