மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துன்புறுத்தியதாக த வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தியாகி செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அப்துல்ஹமீது (வயது 74). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஆஷிகாபேகத்துடன் (68). இந்நிலையில்
எனது வீட்டில் நான், எனது மனைவி, மகள், பேரக்குழந்தை ஆகியோர் வசித்து வருகிறோம். எனக்கும், எனது வீட்டின் அருகே வசிக்கும் துணை தாசில்தார் ஒருவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, துணை தாசில்தார் எனது வீட்டின் மீது கல்லை எறிந்து கதவை உடைத்ததோடு, அவருடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தார். நான் எதற்கு என்று கேட்டதற்கு, வா? என்று கூறி ஆபாசமாக திட்டினார்.
நான் அங்கு சென்ற போது கொல்லைப்புறத்தில் இருந்த மனித கழிவை கையால் அள்ளச்சொல்லியதோடு, அந்த பகுதி முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவச்சொல்லி அதனை வீடியோ எடுத்தனர்.
நான் கேட்டதற்கு, எனது வீட்டில் நீ தான் மனித கழிவை கொட்டினாய். அதனால் தான் உனக்கு இந்த தண்டனை என்று கூறி என்னை கேவலப்படுத்தினர். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்துல்ஹமீது அவரது மனைவி தீடிரென தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் போராட்டத்தை கைவிட்டு அப்துல்ஹமீது அவரது மனைவி நேரில் சென்று ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.