BREAKING NEWS

மனுநீதி நாளில் வேப்பூர் – சேப்பாக்கம் இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை.!

மனுநீதி நாளில் வேப்பூர் – சேப்பாக்கம் இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை.!

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம், நல்லூர் ஒன்றியம் சேப்பாக்கம், கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கோட்டாட்சியர் (பொறுப்பு) லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 102 நபர்களுக்கு 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

அப்போது வட்டாட்சியர் அரங்கநாதன், பீடீஓ ஜெயக்குமாரி, விஏஓ கலையரசன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை, துணைத் தலைவர் கட்டிமுத்து, செயலர் சரவணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றாவது இரண்டு மூன்றாவது வார்டு பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் சேப்பாக்கம் வேப்பூர் இணைப்பு சாலை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

 

அப்போது வட்டாட்சியர் அரங்கநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் பதில் அளிக்க கேட்டுக் கொண்டார் அதன்படி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி சாலை அமைக்கும் பணிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கட்டிமுத்து இந்த விவகாரம் குறித்து கோட்டாட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

இந்நிகழ்வில் வேளாண்மை, தோட்டக்கலை, பொது சுகாதாரம் உள்ளிட்ட துறையை சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் உடல் இருந்தனர்.

CATEGORIES
TAGS