BREAKING NEWS

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.

பங்களாதேஷ் நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் சுமார் 5 ஆண்டுகளாக மறைந்திருந்து மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்தபோது சிக்கியது எப்படி.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர், பழைய மேட்டூர், சின்னத்தம்பி பாளையம், நகலூர், தாசாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

இந்த செங்கல் சூளைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் தங்கி செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,‌ ஆண்டு கணக்கில் தங்கும் இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை தங்களது சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் புதுமேட்டூர் பகுதியில் சின்னச்சாமி என்பவருககு சொந்தமான செங்கல் சூலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் பௌசிதா மாவட்டம், (powsida) நௌதாரா பகுதியைச் சேர்ந்த ரோஹீம்காஜீ (40), தனது மனைவி கோபினா (இறக்கும்போது வயது 26) குழந்தைகள் நான்கு பேர் மற்றும் சகோதரி குடும்பத்தாரோடு செங்கல் அறுக்கும் பணிக்கு வந்துள்ளார்.

 

தொடர்ந்து செங்கல் சூலையிலேயே தங்கி தனது குடும்பத்தாரோடு ரோகிஹீம்காஜீ பணிபுரிந்த வந்த நிலையில் தனது மனைவியான கோபினா அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார்.

இதனை ரோஹீம்காஜீ கண்டித்த நிலையில் அதனைக் கொண்டுள்ளதாக கோபினா செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததன் காரணமாக கடந்த 31-10-2018 அன்று காலை இது குறித்து இருவருக்கும் தகராறு வரவே ரோஹீம்காஜீ வீட்டின் முன்புறம் இருந்த மம்முட்டியால் கோபினாவின் தலையில் பலமாக தாக்கினார் இதில் சம்பவ இடத்திலேயே கோபினா பலியானார்.

 

கோபினா இறந்ததை உறுதி செய்த ரோஹீம்காஜீ இங்கிருந்தால் போலீஸிடம் மாட்டிக் கொள்வோம் என தப்பி தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சென்று விட்டார்.

உடனடியாக ரோஹீம்காஜீயை பிடிக்க தனிப்படை போலீசார் அப்போதே மேற்குவங்க மாநிலம் சென்றுள்ளனர், ஆனால் போலீசார் எப்படியும் தேடி வருவார்கள் என அறிந்த ரோஹீம்காஜீ அருகே உள்ள வங்கதாச நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார், தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக பங்களாதேஷ் நாட்டிற்கும், மேற்கு வங்காளத்திற்கும் மாறி மாறி சென்று கிடைக்கும் கூலி வேலையை செய்து வந்து கொண்டு வந்துள்ளார்.

 

ரோஹீம்காஜீ தப்பிச்சென்ற நிலையிலும் அவரது சகோதரி குடும்பத்தார் தொடர்ந்து அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையிலேயே பணிபுரிந்து வந்தனர், ‌ அவர்களுடன் தொடர்ந்து போலீசார் ரோஹீம்காஜீ குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,

 

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தமிழகம் வந்த ரோஹீம்காஜீ சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியில் உள்ள செங்கல் சூலையில் ஒன்று பணிக்கு வந்து சேர்ந்தது தெரியவந்தது,

உடனடியாக சம்பவ இடத்திற்கு அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் மேச்சேரிக்கு சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த ரோஹீம்காஜீயை தூக்கி வந்தனர் வந்தனர்.

 

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று காலையில் தனது மனைவி கோபினாவிடம் தொலைபேசியில் பேசியது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இதேபோல் செய்து கொண்டிருந்தாள் அடித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் முடிந்தால் அடித்து பார் என கோபினா சவால் விட்டதாகவும் அப்போது ஏற்பட்ட கோபத்தில் மம்முட்டியை எடுத்து கோபிநாவை அடித்துக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

தொடர்ந்து ரோஹீம்காஜீயை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

ஐந்தாண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்த போது போலீசாரிடம் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS