BREAKING NEWS

மயிலாடுதுறையில் இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி.

மயிலாடுதுறையில் இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி.

 

இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு “இதயம் காக்க” விழிப்புணர்வு நடைபயண பேரணி சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 

இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் கொடியசைத்து நடைபயண பேரணியை தொடங்கி வைத்தார். இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

இந்த விழிப்புணர்வு நடை பயண பேரணியில் மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் செல்வம், சாய் வாக்கஸ் கிளப் தலைவர் ராமகிருஷ்ணன், பீக்காக் வாக்கர்ஸ் கிளப் தலைவர் குழந்தைவேலு, தடகள சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி தன்னார்வ பயிலக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,

 

 

திருக்குறள் பேரவை நிர்வாகி முத்துச்செல்வன், லயன்ஸ் மண்டல தலைவர் தஷ்ணாமூர்த்தி, மருத்துவர்கள் வசந்தா ஜெயராமன், வீரபாண்டியன், முத்துக்குமார், சந்திரா, மருதப்பன், கலாராணி, உணவு உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில்வேல்,

 

அறம் செய் அறக்கட்டளை கௌரவ தலைவர் பவுல்ராஜ், நிறுவனர் சிவா, வழக்கறிஞர் சிவச்சந்திரன், சிசிசி சமுதாய கல்லூரி நிறுவனர் காமேஷ், ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பெத்தபெருமாள், ஜெயின் சங்கத் தலைவர் கிஷோர் குமார் ஜெயின், யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

மயிலாடுதுறையில் இதயம் காக்க நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவர்கள், இந்திய இளைஞர்கள் வாழ்வியல் அறக்கட்டளையினர், நகராட்சி தன்னார்வ பயிலக மைய மாணவர்கள், சாய் வார்க்கஸ் கிளப் உறுப்பினர்கள், பீக்காக் வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள்,

 

சிசிசி சமுதாய கல்லூரி மாணவிகள், சேம்பர் ஆப் காமர்ஸ் உறுப்பினர்கள், உணவு உற்பத்தியாளர் சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர், லயன்ஸ் சங்கத்தினர், அறம்செய் அறக்கட்டளையினர், ஜெயின் சங்கத்தினர், என்.சி.எப்.டி பேஷன் பியூட்டிசியன் பயிற்சிமைய மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

நிகழ்ச்சிகளை ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் தொகுத்து வழங்கினார். இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு நன்றி கூறினார்.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை முதுநிலை வணிக மேலாளர் சரவணகுமார் தலைமையிலான குழுவினரும், மருத்துவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )