மயிலாடுதுறையில், தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குத்தாலம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு,
மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குத்தாலம் பேரூர் செயலாளர் ஆ.கருணாநிதி குத்தாலம் பேரூர் துணைச் செயலாளர் த.முருகேசன். குத்தாலம் வர்த்தக சங்க தலைவர் ஆ.தங்கப்பன், அரிமா ஓவியர் மகாலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் கு.கண்ணன், ஊராட்சி கழக செயலாளர்கள் கூடலூர் கிருபானந்தம், ஸ்ரீகண்டபுரம் செல்வம், ஆலங்குடி கணேசன்,
குத்தாலம் பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் ப.அய்யப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோ.ஹரிஹரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மு.தினேஷ், இளைஞர் அணியின் தோழர்கள் நிகாஷ், பாட்சா, அரவிந்த.
இராமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உடன் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் முன்னோடிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
