மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை பொறுப்பு அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அந்த வகையில் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்கமையக் கட்டிடம் திறப்பு விழா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் கத்திரித்து, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்களை மற்றும் உபகரணங்கள் வழங்கினார். தொடர்ந்து பொறையார் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் உரையாற்றினார்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகக் குழு தலைவர் மு. ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், திமுக ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ஞான.இமயநாதன், இளையபெருமாள், எம்.அப்துல்மாலிக், அமுர்த.விஜயகுமார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் காமாட்சி மூர்த்தி மகேந்திரன், நந்தினி ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தரங்கைப் பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, வேளாண்மை துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன், மாவட்ட ஆட்சி நேர்முக உதவியாளர் ஜெயபாலன்,
வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன், வேளாண்மை அலுவலர் விண்ணரசி, துணை வேளாண் அலுவலர் உமா பசுபதி, விதை அலுவலர்கள் நடராஜன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரவிச்சந்திரன் ஜெயக்குமார், உதயசூரியன், மாணிக்கம் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் கணேசமூர்த்தி, சங்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.