மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-
தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பொது தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பணியில் இருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை 11 ஆயிரத்து 191 மாணவர்கள் பொது தேர்வு எழுதுகின்றனர்.38 தேர்வு மையங்களில் நடைபெறும் பொது தேர்வில் 90 பறக்கும் படை அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
CATEGORIES கல்வி
TAGS 12-ம் வகுப்பு பொது தேர்வு12-ம் வகுப்பு பொது தேர்வு ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளிமயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதிமுக்கிய செய்திகள்