மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம்;
பங்குனி உத்திர திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.
பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக முருகன் ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நலத்துகுடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து வந்தும் அலகு காவடி சுமந்து வந்தும் சிறப்பு வழிபாடு செய்தனர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் ஊர்வலம் ஆலயத்தை வந்தடைந்ததும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நலத்துக்குடிபக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடுபங்குனி உத்திர திருவிழாமயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்