மயிலாடுதுறை அருகே நடுவயலில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி உரசியதால் முழுவதுமாக தீயில் கருகி நாசம்

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க வழியில்லாததால் டிராக்டர் முழுவதுமாக தீயில் எறிந்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புடையூர் கிராமத்தில் ராஜ பிரபு என்பவரது வயலில் வைக்கோல் சேகரித்துக் கொண்டு களத்தில் அடக்குவதற்காக டிராக்டர் மூலம் ஓட்டுநர் எடுத்துச் சென்றுள்ளார்.
இதனிடையே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது வயலின் நடுவில் தாழ்வாக சென்ற மின் கம்பி வைக்கோலின் மீது உரசி உள்ளது. தொடர்ந்து மளமளவென தீ பறவ தொடங்கியுள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் வயலின் நடுவில் டிராக்டரை நிறுத்திவிட்டு சென்று தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் காற்றின் வேகம் காரணமாக தீ முழுவதுமாக பரவி டிராக்டர் மற்றும் வைக்கோல் முழுவதுமாக எரிந்து நாசமானது.பின்னர் திருக்கடையூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் வயலின் நடுவே வாகனத்தைக் கொண்டு செல்ல இயலாததால் தீயை அணைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் டிராக்டர் மற்றும் வைக்கோல் முழுவதுமாக நடு வயலில் எறிந்து நாசமானது.