BREAKING NEWS

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்படுகை மற்றும் சோழம்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாப்படுகை கிராம ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மனியத்தின் கீழ் ரூ.3.80

இலட்சம் செலவில் அம்பேத்கர் நகர் முதல் அகர மாப்படுகை வரை தார் சாலை அமைக்கும் பணியையும், ஆவாஸ் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.76 இலட்சம் செலவில் அம்பேத்கர் நகர் பகுதியில் நடைபெற்று வரும் பணியையும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் மற்றும் போர்வெல் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 52 ஆயிரம் செலவில் அரசு உயர்நிலைப்பள்ளி கற்றுச்சுவர் 185 மீட்டர் தூரம் அமைக்கும் பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் கூட பணியையும்,

சோழம்பேட்டை கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் செலவில் ஊராட்சிமன்ற கட்ட கட்டுமானப் பணியையும், பொது நிதியின் கீழ் ரூ. 8 லட்சம் செலவில் வானமுட்டி பெருமாள் கோவில் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியையும், 15-வது நிதிக்குழு மனியத்தின் கீழ் ரூ.5.58 இலட்சம் செலவில் மேளத் தெரு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.17 இலட்சம் செலவில் கோழிகொத்தி பெரியகுளம் பகுதியில் சிமென்ட் சாலை பணியையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.76 இலட்சம் செலவில் நடைபெற்று வரும் வீடுகட்டும் பணி போன்ற பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு
அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன் (வ.ஊ), மீனா (கி.ஊ), ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி (மாப்படுகை). செந்தமிழ்செல்வி (சோழம்பேட்டை) உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )