BREAKING NEWS

மயிலாடுதுறை எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை  எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.

திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்..

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த மூன்று ஆண்டுகளாக தடைப்பட்டு இருந்தது தொடர்ந்து வருகின்ற 2023 ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

 

திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார், சிம்சன் வரவேற்றார். கூட்டத்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளையூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும்..

 

 

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு எம்பி, எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏவை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு அமிர்த விஜயகுமார் தலைமையில் 30 பேர் கொண் விழா குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS