மயிலாடுதுறை, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது.
இங்கு குத்தாலம் வட்டாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து ஆலங்குடி ஊராட்சி நாகமங்கலம் கிராமத்தில் உள்ள புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா தலைமை தாங்கினார்.
மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் மதியரசன் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன்,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேத்தி புதிய அலுவலகத்தை துவக்கி வைத்தார்கள்.
இதில் ஒன்றிய குழு தலைவர் கே. மகேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் இரா.முருகப்பா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், ஒன்றிய திமுக செயலாளர் ஆலங்குடி வைத்தியநாதன், வேளாண்மை அலுவலர் வளர்மதி, துணை வேளாண்மை அலுவலர் ராஜன், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் லட்சுமி நாராயணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தோட்டக்கலை அலுவலர்கள் வேளாண்மை பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் சோ.வெற்றி வேலன் நன்றி கூறினார்.
