BREAKING NEWS

மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

 

பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த மூன்று ஆண்டுகளாக தடைப்பட்டு இருந்தது இந்த ஆண்டு காணும் பொங்கல் தினமான இன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுகிறது.

 

 

கரிச்சான், நடு, பெரிய குதிரைகள் வண்டிகள், சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகள் மற்றும் புதுக் குதிரை வண்டிகளுக்கான பந்தயத்தை பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் காலை 8:30 மணிக்கு மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த பந்தயத்தில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடித்த குதிரை மாடு வண்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

 

 

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுடன் விழா குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS