BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலையூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

 

மக்கள் தொடர்பு நிறைவு நாளில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையுரையில் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாதம் மாதம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடத்தப்படுகிறது.

 

அந்த வகையில் மேலையூர் ஊராட்சியில் இம்முகாம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு கண்காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது.

 

குறிப்பாக வேளாண்மைத்துறையின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் பற்றி செயலி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் அங்கன்வாடி மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும்,

 

 

பாரம்பரிய உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுருத்துகிறது. குழந்தைகளுக்கு குழந்தை பருவம் முதல் சத்தான உணவு வழங்க வேண்டும். அரசு வழங்கும் சத்துமாவை கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

 

சித்தா மூலம் பாரம்பரிய மூலிகை செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

எல்லா பெண்களும் சுயஉதவிக் குழு மூலம் வழங்கப்படும் கடன் மூலம் பொருளாதார ரீதியாக சம்பாதிக்க வேண்டும். கொசு உற்ப்பத்தியை கட்டுப்படுத்த இங்கு விளக்கக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இங்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உயரிய நோக்கம் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது ஆகும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் 4 முறை நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டம் தற்போது 6 முறையாக மாற்றி நடத்தப்படுகிறது.

 

கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கின்ற வரவு, செலவு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் உருவாகி இரண்டு ஆண்டுகள் ஆகி அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

 

பொது மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மேலையூர் கிராமங்களைச் சுற்றியுள்ள, வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடம் கடந்த ஒரு மாத காலமாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன.

 

 

பல்வேறு துறைகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நிறைவு நாளில் ஆணைகள் வழங்கப்படுகின்றன.

நடைபெறுகின்ற மக்கள் தொடர்பு முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு 53 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள 72 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன்,

 

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, மேலையூர் ஊராட்சி மன்றத்தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதிநிதிகள், அரசு அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS