BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு 214 மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

 

 

இதில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதேபோல் திருக்கடையூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஆக்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி வள்ளியம்மை நினைவு மேல்நிலைப் பள்ளி சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு பயின்ற 883 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி பேசினார்.

 

 

இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சித்திக், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன்,

 

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ், சிவராஜ், சந்திரமோகன், லெனின் மேசாக், பள்ளி தலைமை ஆசிரியர்கள் எச்.ராமையன், முகமது சித்திக், ஸ்ரீதர், எஸ்.வேம்பு மற்றும்

திமுக பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )