மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவ, மாணவிகள் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதாபானு சாதிக் தலைமை தாங்கினார்.
ஒன்றியக் குழுத் தலைவர் கே.மகேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.கீதா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்கள் 96 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், ஒன்றியக் குழு துணைத்தலைவர் இரா.முருகப்பா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நாகலட்சுமி முத்துராமன், மற்றும் ராஜவள்ளி பாலமுருகன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், கலந்து கொண்டனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் வெ.முத்துக்குமரன் நன்றி கூறினார்.
