மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை,
“பார்வைக்குஒரு பயணம்” என கண் தான விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கண் தானம் விழிப்புணர்வு பேரணி குத்தாலம் லயன்ஸ் சங்கம். ஆடுதுறை லயன்ஸ் சங்கம்.திருவிடைமருதூர் லயன்ஸ் சங்கம். பந்தநல்லூர் லயன்ஸ் சங்கம். ஆகிய ஊர்களில் உள்ள லயன்ஸ் சங்கம் மற்றும் கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி ஒன்றிணைந்து நடத்திய பார்வைக்கு ஒரு பயணம் என கண் தான விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கண் தானம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டு அணிவகுத்து மாணவ மாணவிகள் சென்றனர் இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் லயன்ஸ் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
முன்னாள் மண்டல தலைவர் டி.ராஜ்குமார் வரவேற்புரையற்றினார்.பார்வைக்கு ஒரு பயணம் மண்டல தலைவர் விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் உடன் முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகவேல். மண்டலத் தலைவர் மருத்தூர் சின்னதுரை. டாக்டர் சிக்கந்தர் ஹயத்கான்
வட்டாரத் தலைவர். மரிஅந்துவான், விஜயசரவணன், செயலர்.பார்த்திபன், சொக்கலிங்கம், முத்துக்குமார், M.கணேசன் மற்றும்.குத்தாலம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் கருப்புச்சாமி நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.