BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் .

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்  மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் .

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினார். இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் இறுதியாண்டு படிக்கும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு பணிரெண்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து மனிதவள மேலாளர்கள் வந்து நேர்முக தேர்வு நடத்தி மாணவர்களின் சுய விபரப்பட்டியல்களை பெற்றுக் கொண்டனர்.

Dr. ராஜன், கணிததுறை பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் துவங்கி வைத்து வேலை வாய்ப்பின் நோக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார், Dr. M. ஜான்சன் ஜெயக்குமார், IQAC ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை நல்கினார்.

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியினை கணித துறை தலைவர்.Dr. பியூலா தங்கராஜ் வழிகாட்டுதலின்படி, கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பேராசிரியர் மற்றும் கணிதத் துறை பேராசிரியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )