BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா  தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் இளங்கலை, முதுகலை கூட்டுறவு இறுதியாண்டு மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் இறுதியாண்டு படிக்கும் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்னையிலிருந்து ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து இயக்குனர், மேலாளர்கள், உதவி மேலாளர்கள் ஆகியோர்கள் வந்து நேர்முக தேர்வு நடத்தி மாணவர்களின் சுய விபரப்பட்டியல்களை பெற்றுக் கொண்டனர்.

Dr. ஜோயல் எட்வின், கூட்டுறவுத்துறை தலைவர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். Dr. ஜீன் ஜார்ஜ் அவர்கள் துவங்கி வைத்து வேலை வாய்ப்பின் நோக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். இறுதியாக பேராசிரியர். Dr. ராஜா சாலமன், நன்றியுரை கூறினார்.

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியினை கூட்டுறவுத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தனர்.
மாணவர்கள் ஆர்வமுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )