மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெயில் வாட்டியது இந்நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தரங்கம்பாடி பொறையார், திருக்கடையூர், சங்கரன்பந்தல், செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் இடியுடன் கூடிய மிதமான மற்றும் சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது.
இதனால் கோடை வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS இடியுடன் கூடிய மழைகனமழைதமிழ்நாடுதரங்கம்பாடி தாலுகாதலைப்பு செய்திகள்மயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்வானிலை