BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.

செய்தியாளர் தாரிக்கனி.

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கிராமத்தில் சந்தைக்கு விற்கப்படும் பசுக்களை காப்பாற்றி கோசாலை  அமைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது.

 

இந்த கோசாலையில் வயது முதிர்ந்த சுமார் 1000 மாடுகளுக்கு மேல் உள்ளன. இங்கு மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று கோமாதா பூஜை நடைபெற்றது. பண்ணையில் உள்ள மாடுகளுக்கு கரும்பு, சர்க்கரை பொங்கல் மூக்கணாங்கயிறு வைத்து பூஜித்தனர்.

 

பின் மாட்டுத்தொழுவத்தில் மயிலாடுதுறை நடராஜன் சாஸ்திரிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். பசுக்களுக்கு  தீபாராதணை செய்யப்பட்டு பழம், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

 

கோசாலை நிர்வாகி குருசாமி உள்ளிட்ட பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர் கோமாதவை வழிபட்டனர்.

 

CATEGORIES
TAGS