மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

தேனி மாவட்டம் குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் தேனி பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பள்ளிக்கு சென்று வருகின்றார். இந்நிலையில் நேற்று சுமார் 7:30 மணி அளவில் மாணவன் சிகை (முடி) திருத்தம் செய்வதற்காக விடுதியை விட்டு வெளியே சென்று திரும்பும் வழியில் சாலையில் பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மருத்துவர்களை அணுகி மாணவனுக்கு உயர் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்கள்.
மாணவன் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் மாணவனை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவனுக்கு ஆறுதல் சொல்லி, முழு உடல் தகுதி பெற்ற பின்பு விடுதிக்கு செல்லலாம் எனவும் தேவையான எந்த உதவியும் அரசு செய்து தர தயாராக இருப்பதாக கூறி ஆறுதல் வழங்கினார்.