மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட் பயிரிடும் விவசாயிகள்..!!
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட்; விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம்.
உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட
பீட்ரூட் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. பீட்ரூட் அதிகளவில் சாகுபடி செய்யப்படும்போது தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.
பீட்ரூட் சாகுபடி செய்தால் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறுகிய காலப்பயிர் என்பதால் கிணற்றுப்பாசனம் மூலம் ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும், குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வியாபாரிகள் தோட்டங்களுக்குள் நேரடியாக வந்து அறுவடை செய்து கழுவி சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச் செல்கிறார்கள். இங்கு உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதில் பீட்ரூட் தற்போது ஒரு கிலோ பீட்ரூட் ரூ.5 முதல் ரூ. 7 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. என விவசாயிகள் தெரிவித்தனர்.